Wednesday, September 30, 2009

இலங்கையின் நீ(நி)தித்துறை


ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இசுரு பாலபட்டபந்தி நெதர்லாந்தின் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை மாத்திரமல்லாது நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தி ஆகிய இருவரையுமே மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தியின் மகனான இசுரு பாலபட்டபெந்தி, பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் மகளையே மணம்முடித்துள்ளார். அசோக டி சில்வாவின் மகள் தற்போது நெதர்லாந்தில் உயர் கல்வி பயின்று வருவதனால் அவரது கணவரான இசுரு பாலபட்டபெந்தியை நெதர்லாந்திற்கு அனுப்ப ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில், நெதர்லாந்தில் கல்விபயின்றுவரும் நீதியரசின் மகளுக்கு, தனது கணவரான இசுரு பாலபட்டபெந்தியுடன் இலங்கை அரசாங்கத்தின் செலவில் வாழக்கூடிய அதிர்ஸ்டம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் வசிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் செலவில் நெதர்லாந்தில் சொகுசு வீடொன்றைப் பெற்றுக்கொடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இசுரு பாலபட்டபந்தியை நெதர்லாந்து தூதரக அலுவலகப் பணிகளில் நியமித்ததன் மூலம் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, உயர்நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தி ஆகியோரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ தனது கைக்குள் போட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, பதில் பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்கவின் கணவரை காப்புறுத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்ததன் மூலம் சிராணி பண்டாரநாயக்கவையும் தனது கைக்குள் போட்டுக் கொள்ள ஜனாதிபதி  முனைப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உள்ளிட்ட நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க, ஜகத் பாலபட்டபந்தி ஆகியோர் அண்மையில் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர சமர்ப்பித்த மனு மீதான விசாரணையில் அவருக்குச் சார்பான தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதன்போது பி.பீஜயசுந்தரவின் கோரிக்கையை சிராணி திலகவர்தன மாத்திரமே நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tuesday, September 29, 2009

கலைஞர் ஒரு சதிவலைஞர்

அண்மையில் தமிழகத்தின் சிறந்த நடிகர் மற்றும் நடிகை ஏனைய இன்னோரன்ன கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக முதல்வர் வழங்கியதோடு தானும் ஒன்றை பெற்றுக் கொண்டார். விருது வழங்கத்தான் வேண்டும் கலைஞர்கள் கெளரவிக்கப்பட வேண்டியர்கள்தான் நாமும் அதனை வரவேற்கின்றோம்(ஓமடா இதுவா முக்கியம் விடயத்து வருகிறேன்)
சிறந்த நடிகர் கமலும் ரஜனியுமாம் என்ன இழவடா இது? செவாலியர் சிவாஜி கூட தனது வயது முதிர்ந்த கால கட்டத்தில் நடித்த படங்களை விட ஏற்ற பாத்திரங்களை பாத்திருக்காலம் இவர்களை தெரிவு செய்த தேர்வுக்குழு (அதெல்லாம் எங்க விழங்க போகுது) மாமனும் மருமகனும் ஒரே பொம்பிளய கட்டி பிடிப்பாங்களாம் மாறி மாறி (இப்படி எங்க ஊரில் நடந்தால் இதற்கு பெயர் வேறு? என்ன என்று கேட்க வேண்டாம் சரி அதவிடுங்க கமல் என்னய்யா நடக்குது ? சரி அதல்லாம் கிடக்கட்டும் அஜந்தா என்றொரு படமாம் யார்தான் பாத்தாங்களோ தெரியா? இந்த படத்தில் இசையமைத்த நம்ம இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது??? சரி விடுவம்்க்கள மொழி படம்தான் சிரியில்ல சிவாஜியுடன் ஒப்பிடும் போது இதுவுமா? மொழி படம் எந்த விதத்திலும் இதற்கு குறைந்ததல்ல பார்த்த மகா ஜனங்களுக்கு தெரியுமே
 இதுல முக்கியமானதொரு விடயம் தேர்வுக்குழுவிடம் தலைவர் upset ஆகிற மாதிரி பட்டியலை தயாரிக்க வேணாம் என்று சொல்லப்பட்டதாம் ஓ ஓ அது தான ரஜனி கமலுக்கு விருது??? விளங்குதய்யா விளங்குது...............
இலங்கையில் போர் உச்சம் அடைந்த நிலையில் போரை நிறுத்து நிறுத்த என எத்தனை மக்கள் கத்தினார்கள் கதறினார்கள் மத்திய அரசாங்கத்தில் ஆடு மேய்ப்பது மாடு மேய்ப்பது போன்ற பதவிகளை வகித்துக் கொண்டு பூச்சாண்டி காட்டி கொண்டு  சூரியன் fm சக்தி fm நிகழ்ச்சிக்கு தலைப்பு தேடுவது போன்று உண்ணாவிரம் என்று சும்மா உடான்ஸ் விட்டு சண்டை நிறுத்திட்டமில்ல என அறிக்கை விட்டு தேர்தலில் வென்று தமிழர்களை அடகு வைத்த  உங்களுக்கு உளியின் ஓசைக்கான வசனகர்த்தா விருது வேற? என்னத்த சொல்ல? முடியலப்பா இந்தியா அதில வளருது இதில வளருது என டீல் விட்டு தமிழ் நாட்டு படித்த மேதைகளை கொண்டு வெற்றியும் பெற்ற உங்களுக்கு விருது வேற? ரஜனி கமலுடன் போட்டோவுக்கு போஸ் வேற? தமிழ் ஜனங்கள் முதலில் அரசியலில் புதிய தலைமையை கண்டு பிடிக்க வேண்டும் தமிழ் நாட்டுக்காரரே நீங்க படித்தவர்கள் தானே? எங்களுக்கு தெரியும் நீங்க திருந்த மாடடீங்கடா திருந்தவும் விட மாட்டீங்கடா


Monday, September 28, 2009

www.excitefun.com
உண்மைகள் காலம் தாழ்த்தியே தெரிகின்றன
அதுவே மிகப்பெரிய மனக்கஸ்டத்தை பின்நாளில்
தருகின்றது