ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இசுரு பாலபட்டபந்தி நெதர்லாந்தின் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை மாத்திரமல்லாது நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தி ஆகிய இருவரையுமே மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தியின் மகனான இசுரு பாலபட்டபெந்தி, பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் மகளையே மணம்முடித்துள்ளார். அசோக டி சில்வாவின் மகள் தற்போது நெதர்லாந்தில் உயர் கல்வி பயின்று வருவதனால் அவரது கணவரான இசுரு பாலபட்டபெந்தியை நெதர்லாந்திற்கு அனுப்ப ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், நெதர்லாந்தில் கல்விபயின்றுவரும் நீதியரசின் மகளுக்கு, தனது கணவரான இசுரு பாலபட்டபெந்தியுடன் இலங்கை அரசாங்கத்தின் செலவில் வாழக்கூடிய அதிர்ஸ்டம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் வசிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் செலவில் நெதர்லாந்தில் சொகுசு வீடொன்றைப் பெற்றுக்கொடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இசுரு பாலபட்டபந்தியை நெதர்லாந்து தூதரக அலுவலகப் பணிகளில் நியமித்ததன் மூலம் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, உயர்நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தி ஆகியோரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ தனது கைக்குள் போட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, பதில் பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்கவின் கணவரை காப்புறுத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்ததன் மூலம் சிராணி பண்டாரநாயக்கவையும் தனது கைக்குள் போட்டுக் கொள்ள ஜனாதிபதி முனைப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உள்ளிட்ட நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க, ஜகத் பாலபட்டபந்தி ஆகியோர் அண்மையில் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர சமர்ப்பித்த மனு மீதான விசாரணையில் அவருக்குச் சார்பான தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதன்போது பி.பீஜயசுந்தரவின் கோரிக்கையை சிராணி திலகவர்தன மாத்திரமே நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment