அண்மையில் தமிழகத்தின் சிறந்த நடிகர் மற்றும் நடிகை ஏனைய இன்னோரன்ன கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக முதல்வர் வழங்கியதோடு தானும் ஒன்றை பெற்றுக் கொண்டார். விருது வழங்கத்தான் வேண்டும் கலைஞர்கள் கெளரவிக்கப்பட வேண்டியர்கள்தான் நாமும் அதனை வரவேற்கின்றோம்(ஓமடா இதுவா முக்கியம் விடயத்து வருகிறேன்)
சிறந்த நடிகர் கமலும் ரஜனியுமாம் என்ன இழவடா இது? செவாலியர் சிவாஜி கூட தனது வயது முதிர்ந்த கால கட்டத்தில் நடித்த படங்களை விட ஏற்ற பாத்திரங்களை பாத்திருக்காலம் இவர்களை தெரிவு செய்த தேர்வுக்குழு (அதெல்லாம் எங்க விழங்க போகுது) மாமனும் மருமகனும் ஒரே பொம்பிளய கட்டி பிடிப்பாங்களாம் மாறி மாறி (இப்படி எங்க ஊரில் நடந்தால் இதற்கு பெயர் வேறு? என்ன என்று கேட்க வேண்டாம் சரி அதவிடுங்க கமல் என்னய்யா நடக்குது ? சரி அதல்லாம் கிடக்கட்டும் அஜந்தா என்றொரு படமாம் யார்தான் பாத்தாங்களோ தெரியா? இந்த படத்தில் இசையமைத்த நம்ம இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது??? சரி விடுவம்்க்கள மொழி படம்தான் சிரியில்ல சிவாஜியுடன் ஒப்பிடும் போது இதுவுமா? மொழி படம் எந்த விதத்திலும் இதற்கு குறைந்ததல்ல பார்த்த மகா ஜனங்களுக்கு தெரியுமே
இதுல முக்கியமானதொரு விடயம் தேர்வுக்குழுவிடம் தலைவர் upset ஆகிற மாதிரி பட்டியலை தயாரிக்க வேணாம் என்று சொல்லப்பட்டதாம் ஓ ஓ அது தான ரஜனி கமலுக்கு விருது??? விளங்குதய்யா விளங்குது...............
இலங்கையில் போர் உச்சம் அடைந்த நிலையில் போரை நிறுத்து நிறுத்த என எத்தனை மக்கள் கத்தினார்கள் கதறினார்கள் மத்திய அரசாங்கத்தில் ஆடு மேய்ப்பது மாடு மேய்ப்பது போன்ற பதவிகளை வகித்துக் கொண்டு பூச்சாண்டி காட்டி கொண்டு சூரியன் fm சக்தி fm நிகழ்ச்சிக்கு தலைப்பு தேடுவது போன்று உண்ணாவிரம் என்று சும்மா உடான்ஸ் விட்டு சண்டை நிறுத்திட்டமில்ல என அறிக்கை விட்டு தேர்தலில் வென்று தமிழர்களை அடகு வைத்த உங்களுக்கு உளியின் ஓசைக்கான வசனகர்த்தா விருது வேற? என்னத்த சொல்ல? முடியலப்பா இந்தியா அதில வளருது இதில வளருது என டீல் விட்டு தமிழ் நாட்டு படித்த மேதைகளை கொண்டு வெற்றியும் பெற்ற உங்களுக்கு விருது வேற? ரஜனி கமலுடன் போட்டோவுக்கு போஸ் வேற? தமிழ் ஜனங்கள் முதலில் அரசியலில் புதிய தலைமையை கண்டு பிடிக்க வேண்டும் தமிழ் நாட்டுக்காரரே நீங்க படித்தவர்கள் தானே? எங்களுக்கு தெரியும் நீங்க திருந்த மாடடீங்கடா திருந்தவும் விட மாட்டீங்கடா

No comments:
Post a Comment